Thursday, February 23, 2012

உன்னை வேண்டாமென்று வெறுத்தவை

உன் விரலைப் பிரிந்த
நகத்துண்டு,
உன்னை விட்டு உதிர்ந்த
தலை முடி,
உன்னை விட்டுத் தவறிய
கைக்குட்டை என
எதுவுமே என்னிடம் இல்லை!
உன்னை
வேண்டாமென்று வெறுத்தவை
எனக்கெதற்கு?

Tuesday, February 7, 2012

SMS

நீ பேசப்போவதில்லை
என பறை சாற்றுவதுக்கு
இப்படி ஓயாம SMS அனுப்பி
என்ன கொடுமப்படுத்துரதுக்கு
பதில்
என்னிடம் நீ
பேசித்தொலைத்திருக்கலாம்

கோபப்புயல்

என்னைக்காவது
உண்மையை சொல்லி
இருக்கியா என
நீ கோபமாக
கேட்டபொழுது
நான் பரிதாபமாக முகத்தை
வைத்துக்கொண்டு
கோபதிலயும் நீ
அழகாத்தாண்டி இருக்கே
எனக்கூறியதும்
அதுவரை
உன் முகத்தில் நிலைகொண்டிருந்த
கோபப்புயல்
வெட்கப் புயலாக
மாறியது !

பொய்

இனிமே என் கிட்டே
பொய் சொன்னா
அவ்வளவுதான்
என கடுமையாக
முகத்தை வைத்துக்கொண்டு
சொல்கிறாய்
‘சாரி இனிமே
நான் பொய்யே
சொல்ல மாட்டேன்’
என நான் மீண்டும் ஒரு
பொய் சொன்னால்தான்
நீ சிரிக்கிறாய்!

சிலை

கருப்பாக
இருப்பதாக
குறைபட்டுக்
கொள்கிறாய்
சிலைகள்
எந்த நிறத்தில்
இருந்தால் என்ன?

ஊடல்

அவளையே பார்த்துக்கோ
என்னை விட்டு விடு
என என்னிடம்
இன்றைய ஊடலை
ஆரம்பிக்கிறாய்

நான் உன்னிடம்
பேசப்போவதில்லை
என என்னிடம்
பேச ஆரம்பிக்கிறாய்

சீக்கிரம்

ஒவ்வொரு முறையும்
சீக்கிரம் போகவேண்டும்
என்கிறாய்
நமது சீக்கிரம்
அவ்வளவு சீக்கிரமாய்
வருவதில்லை !

கவிதைப்புத்தகம்

உலகின் மிகச்சிறிய
கவிதைப்புத்தகம்
என்னிடம் இருக்கிறது
நீ
முகம் துடைத்து
வீசி எறிந்த
டிஷ்யூ பேப்பர் வடிவில்

நீ

நீ எனக்கில்லை என்றாலும்
என்னிடம் இருப்பதெல்லாம்
நீதான்

Monday, February 6, 2012

நம்ப மாட்டார்கள்

தேவதைக்கும்
ராட்சசிக்கும்
ஒற்றுமைகள்
உண்டென்று கூறினால்
சத்தியமாக நம்ப மாட்டார்கள்
காதலிக்காதவர்கள்

நினைவு

என்னைச் சுற்றி நடக்கும்
என்னவெல்லாமோ
உன்னை ஞாபகப்படுத்துகின்றன.
அவ்வளவு ஏன்
யாராவது கீழே விழுந்தால்கூட
நீ மேலே விழுந்தது நினைவிற்கு வருகிறது!

காதல் வசப்படுகிறேன்

ஒரு குழந்தைபோல அழும்
உன்னை சமாதானப்படுத்தும்போது
முன்னிலும் அதிகமாய்
உன்மேல் காதல் வசப்படுகிறேன் நான்

நான் ஏன் காதலிக்கவேண்டும்

ஏதோ ஒரு
அலுவல் காரணமாக
சாப்பிடாமல்
அவசமாகக் கிளம்பிக்கொண்டிருக்கும்
உன்னை
சுற்றிச் சுற்றி வந்து
சோறு ஊட்டி விடுவதற்காகவாவது
நான் காதலிக்கவேண்டும்.

துணிவில்லை

ஆயிரம் முறை அழைத்தும்
தனியாக வர மறுத்த
உனக்கு
ஒரு விஷயம் புரியவேயில்லை.
உன் கைப்பிடித்து
பேசிக்கொண்டிருப்பதைவிட
உன்னிடம்
வேறு எதையும் செய்ய
எனக்குத் துணிவில்லை என்று!

என்ன தான் செய்வது?

செலவழிக்கவும் முடியவில்லை
வேறு எதுவாக
மாற்றிக் கொள்ளலாமெனில்
அதற்கும் வழியில்லை
இவ்வளவு காதலை வைத்துக்கொண்டு
நீ அருகில் இல்லாமல்
நான் மட்டும் என்ன தான் செய்வது?

Saturday, February 4, 2012

நானும் கடவுள்

சொர்கத்தில் இருப்பவர்
கடவுள் என்றால்
நானும் கடவுள் தான்
உன் அருகில் இருக்கும் போது

காதல்

காத்திருந்து காத்திருந்து
நீயும்
நானும்
எத்தனையோ முறை
ஏமாந்து போனாலும்
காத்துக்கிடக்கிறது
நமக்காக காதல்

ஒரு நொடியாவது

ஒவ்வொரு நொடியும்
உன்னை
நான்
நினைத்து கொண்டிருக்கிறேன் ...
ஒரு நொடியாவது
என்னை நீ நினைப்பாயா என்று....!

நினைவுகள்

பிறக்கும் போது
நான் எதுவுமே கொண்டு வரவில்லை
ஆனால் இறக்கும் போது
கண்டிப்பாக கொண்டு செல்வேன்
உன் நினைவுகளை.....!

நினைவு

நீ என்னை
நினைக்கிறாயோ இல்லையோ
விக்கல் வரும் போதெல்லாம்
நான் நினைத்து கொள்கிறேன்
நீதான் என்னை நினைக்கிறாய் என்று

தவிப்பு

என் தவிப்பு
அவளுக்கு
சிரிப்பாக இருக்கலாம்....!
அவளுக்கு தெரியாது
அவள் சிரிப்புக்காக தான்
நான்
தவித்து கொண்டு இருக்கிறேன் என்று...!

நடிப்பு

என் இதயம்
துடிகிறதோ
இல்லையோ
நன்றாக நடிக்கிறது
உன்னை மறந்து விட்டேன் என்று.....

காதலிக்கக்காரணம்

நான் சிறிது காயப்பட்டாலும்
என்னை விடவும்
அதிகம் துடிப்பவள் நீ..
இப்போது புரிகிறதா,
நான் உன்னைக்
கனவிலும்
காதலிக்கக்காரணம்

ஆச்சர்யம்

நேற்று முதன் முறையாக
உன் கனவில் நான் வந்ததாக
கூறி ஆச்சரியப்பட்டாய்.
என் கனவில் நீ வராவிட்டால்
தான் எனக்கு அது ஆச்சர்யம்.

Friday, January 27, 2012

தேவதை

தேவதைகள்
வெள்ளை உடையில்தான் வரும்
என்று நான் இவ்வளவு நாளாக
நினைத்தது தவறு போலவே!!!!!
நீ கலர் கலராக உடையனிகிறாயே

பூ

உன்னை சுற்றி வரும் வண்ணத்து
பூச்சிக்கு எப்படி புரிய வைப்பேன்..
நீ பூ அல்ல என்று..

Thursday, January 26, 2012

நீ வரும் போது

தும்மல் வரும்போது
இதயம் ஒரு நொடி
நின்றுவிடுமாம்

நீ வரும் போது
தும்மலே நின்றுவிடுமே!!!!